கனடாவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க பிரதமர் மோடி ஒப்புதல்

0 1141

பிரதமர் மோடியிடம், கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கனடாவுக்கு இந்த மாதம் 5 லட்சம் டோசுகள் கோவிஷீல்டு தடுப்பூசியை அனுப்பி வைக்க இந்தியா கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது.

தடுப்பூசி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் ஜஸ்டின் டுரூடோ தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டார். கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற இந்த தொலைபேசி உரையாடலின் போது 10 லட்சம் டோசுகள் வழங்குமாறு கனடா சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

இதனிடையே, வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின், ராணுவத்தினருக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments