எட்றா வண்டிய....என பேருந்தின் முன் நின்று குடிபோதை ஆசாமி சாகசப் பயணம்... காளிமுத்துக்கு கட்டம் சரி இல்ல!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வடிவேலு பாணியில் அரசுப் பேருந்தின் முன்பக்கம் நின்றவாறு பயணம் செய்த குடிபோதை ஆசாமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஆலங்குளம் வந்திருக்கிறார். பொருட்களை வாங்கி பையில் போட்டவர், அப்படியே மதுவையும் வாங்கி வயிற்றுக்குள் ஊற்றி இருக்கிறார். தலைக்கேறிய போதையுடன் எக்ஸ்பிரஸ் பேருந்தில் ஏறியவரை, கரும்புளியூத்தில் நிற்காது என்று கூறி நடத்துநர் இறக்கிவிட்டார்.
ஆவேசமடைந்த காளிமுத்து, பேருந்தை நகர விடாமல் முன்னால் நின்றவாறு ஆபாசமாக வசைபாடத் தொங்கினார். தொடர்ந்து பேருந்தின் முன்பக்கம் காளிமுத்து ஏறி நிற்கவே, அவரை பயமுறுத்துவதற்காக ஓட்டுநர் பேருந்தை சில அடி தூரம் இயக்கினார்.
Comments