பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்திப்பு

0 11807

சென்னையில் பிரதமர் மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்துப் பேசினார்.

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற  புதிய திட்டங்களுக்கான தொடக்கவிழாவிற்கு பின்னர், இந்த சந்திப்பு நடைபெற்றது. 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்களை அறிவித்ததற்கும், மேலும் புதிதாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததற்கும் பிரதமர் மோடிக்கு அப்போது முதலமைச்சர் நன்றி தெரிவித்ததாக தெரிகிறது.

தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இதனைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் சந்திர ரெட்டி, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments