பெண்களிடம் சில்மிஷம் செய்த போதை ஆசாமி : கம்பத்தில் கட்டி வைத்து அடி உதை

0 9952
பெண்களிடம் சில்மிஷம் செய்த போதை ஆசாமி : கம்பத்தில் கட்டி வைத்து அடி உதை

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இரவு நேரத்தில் குடிபோதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

சரவணன் என்ற அந்த நபர், இரவு நேரமானால் குடித்துவிட்டு வந்து தெருவில் ஆபாசமாகப் பேசுவது, ஸ்கூட்டியில் சென்றவாறு பெண்களை பின்பக்கமாகத் தட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்றிரவும் பெண் ஒருவரிடம் குடிபோதையில் அவன் சில்மிஷத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதி இளைஞர்கள் சரவணனைப் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து, சரமாரியாகத் தாக்கினர்.

பாதிக்கப்பட்ட பெண்களை விட்டே அவனை செருப்பால் அடிக்குமாறு கூறினர்.

போலீசார் மீட்க முயற்சித்தபோது இளைஞர்கள் மேலும் ஆவேசமடைந்து சரவணனை தாக்கினர். நீண்ட போராட்டத்துக்குப் பின் அவனை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments