“செப்டிக் டேங்க்” சுத்தம் செய்ய இறங்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு - 2 பேர் கைது

0 2492
“செப்டிக் டேங்க்” சுத்தம் செய்ய இறங்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு - 2 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய இறங்கிய 3 தொழிலாளிகள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

காட்ரம்பாக்கத்தில் இயங்கி வரும் வெங்கடேஸ்வரா கேட்டரிங் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனம், அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு உணவு விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று விடுமுறை என்பதால் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்ய முடிவெடுத்து, முருகன், பாக்கியராஜ், ஆறுமுகம் என கூலித் தொழிலாளிகள் மூன்று பேரை அழைத்துள்ளனர்.

செப்டிக் டேங்க்குக்குள் முதலில் இறங்கிய முருகன் விஷவாயு தாக்கி மயக்கமடைந்து இறந்த நிலையில், அவரைக் காப்பாற்ற அடுத்தடுத்து இறங்கிய இரண்டு பேரும் விஷவாயு தாக்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டனர்.

தலைமறைவாகவுள்ள கேட்டரிங் நிறுவனத்தின் உரிமையாளரையும் மேலாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments