ராஜஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டர் 99 ரூபாய் 29 காசுகள் உயர்வு

0 3696
ராஜஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டர் 99 ரூபாய் 29 காசுகள் உயர்வு

ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 99 ரூபாயாக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்த்தியுள்ளன.

இன்று மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 29 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோலுக்கு லிட்டருக்கு 32 ரூபாய் 90 காசுகளும், டீசலுக்கு லிட்டருக்கு 31 ரூபாய் 80 காசுகளும் மத்திய அரசின் உற்பத்தி வரியாகும்.

ராஜஸ்தானில் பெட்ரோல் மீது 36 விழுக்காடும், டீசல் மீது 26 விழுக்காடும் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒன்றரை ரூபாயும், டீசலுக்கு ஒன்றே முக்கால் ரூபாயும் சாலைப் பராமரிப்புக்கான மேல் வரி விதிக்கப்படுகிறது.

இதனால் ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 29 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 17 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments