தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒரு போதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது - பிரதமர் மோடி

0 1609

 

தேவேந்திர என்கிற பெயர் தனது பெயரான நரேந்திரவுடன் இசைந்து வருகிறது என்று கூறிய பிரதமர் மோடி, நல்லிணக்கம், நேசம், சகோதரத்துவத்தை கொண்டாடுபவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் என புகழாரம் சூட்டினார். 

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 7 உட்பிரிவுகளை சேர்ந்தோர், தேவேந்திரகுல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் என்றும் அதற்கான அரசியல் சாசன திருத்தம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

சென்னையில் நவீன மின்பிடித் துறைமுகம் அமைய உள்ளது என்றும்,
கடற்பாசி வளர்ப்புத் தொழில் தமிழக மீனவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் பிரதமர் மோடி கூறினார். தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒரு போதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது என்று கூறிய பிரதமர் மோடி, தற்போது இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் ஒருவர் கூட இல்லை என்றார்.

இலங்கைத் தமிழர்களுக்காக சுமார் 50ஆயிரம் வீடுகளை மத்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது என்று கூறிய பிரதமர், இலங்கை தமிழர்களை சந்திக்க, யாழ்ப்பாணம் சென்று வந்த ஒரே இந்திய பிரதமர் தாம்தான் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments