சென்னையில் புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

0 15077

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை

வணக்கம் சென்னை என்று கூறி உரையை தொடங்கினார் மோடி

வணக்கம் தமிழ்நாடு என்று கூறி உரையை தொடர்கிறார் மோடி

image

சென்னையில் இன்றைய தினம் இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி

சென்னை எனும் இந்த மிகச்சிறந்த நகர மக்கள் இன்று எனக்கு கொடுத்த வரவேற்புக்கு நன்றி

சென்னை மாநகர் முழுக்க முழுக்க அறிவுத்திறன் மற்றும் படைப்புத்திறன் கொண்டது

சென்னை மாநகர் முழுக்க முழுக்க உற்சாகம் மற்றும் ஆற்றல் கொண்டது

இன்று துவங்கியுள்ள திட்டம் தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும்

இன்று துவங்கியுள்ள திட்டம் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் என்பதன் அடையாளம்

கல்லணை கால்வாய் திட்டம் நிறைவு பெற்ற பிறகு கிடைக்கும் பலன் நாம் நினைத்து கூட பார்க்க முடியாதது

சுமார் 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் கல்லணை கால்வாய் திட்டம் சாலச்சிறந்தது

சாதனை படைக்கும் அளவிற்கு தமிழக விவசாயிகள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துள்ளனர்

தமிழக விவசாயிகளின் நீர் மேலாண்மையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்

image

கல்லணை கால்வாய் திட்டம் சுயசார்பு இந்தியா திட்டத்தின் பழங்கால எடுத்துக்காட்டு

ஔவையாரின் பாடலை மேற்கோள்காட்டி நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் மோடி

சென்னை மிகச்சிறந்த மாநகர் - மோடி

image

“வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும்,
குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்” - ஔவையார்

கொரோனா சூழலிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ரயில் பெட்டிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது

image

சென்னையின் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63000 கோடி ஒதுக்கீடு

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேறு எந்த நகருக்கும் இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை

 

சென்னைக்கு தான் அதிக நிதி - மோடி

சென்னை கடற்கரை - அத்திப்பட்டு ரயில் பாதை சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும்

புதிய ரயில் பாதையால் பயணிகள் ரயில் உரிய நேரத்தில் இலக்கை அடைய முடியும்

மின்பாதைகள் மின்மயமாக்கப்பட்டதால் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல முடியும்

பாதுகாப்பு படையினரின் தன்னலம் இல்லாத தீரம் தான் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது

ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் எனும் பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி உரை

நண்பகல்: 12.30 மணி 

பாரதி பாடலை சுட்டிக்காட்டிய மோடி

நவீன ஆயுதங்களின் முக்கியத்துவத்தை பாரதி பாடல் மூலம் தெரிந்து கொள்ள முடியும்

2 வருடங்களுக்கு முன்னர் புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம்

உலகின் மிக தொன்மையான மொழி தமிழ் மொழி - மோடி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மார்க்1ஏவை நாட்டிற்கு அர்ப்பணித்ததில் பெருமை

தமிழகம் ஏற்கனவே நாட்டிலேயே முன்னணி ஆட்டோ மொபைல் மையமாக திகழ்கிறது

விரைவில் தமிழகம் டாங்கிகள் உற்பத்தி மையமாக உருவெடுக்கும் என்று மோடி நம்பிக்கை

தமிழகத்தில் உருவாக்கப்பட்ட டாங்கி வடக்கில் இந்திய எல்லையை பாதுகாக்க உள்ளது

உலகில் சக்தி வாய்ந்த ராணுவமாக நமது படைகளை நாம் உருவாக்க வேண்டும்

ராணுவத்தை சக்தி வாய்ந்ததாக உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது

இந்தியாவை எத்தகையை அச்சுறுத்தல்களில் இருந்தும் பாதுகாக்கும் வல்லமை நமக்கு உண்டு

இந்தியா எந்த விலை கொடுத்தேனும் நமது இறையாண்மையை கட்டிக்காக்கும்

ஆயுதம் செய்வோம் - மோடி சூளுரை

2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ஐஐடி டிஸ்கவரி வளாகம் செங்கல்பட்டில் அமைய உள்ளது

உலக அளவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஐஐடி புதிய வளாகம் அடிப்படையாக அமையும்

உலக நாடுகளின் சாதகமான பார்வை தற்போது இந்தியா மீது திரும்பியுள்ளது

130 கோடி இந்திய மக்களின் கடின உழைப்பால் உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்துள்ளது

உலக அரங்கில் தற்போது இந்தியாவிற்கான நேரம் உருவாகியுள்ளது

இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்

இந்தியா மீது உலக நாடுகளின் பார்வை

மீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நவீன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன

மீனவர்களின் நலன் முக்கியம் - மோடி

சென்னையில் நவீன மின்பிடித் துறைமுகம் அமைய உள்ளது

கடற்பாசி வளர்ப்புத் தொழில் தமிழக மீனவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும்

கடற்பாசி பூங்கா தமிழக மீனவப் பெண்மணிகளுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

சுகாதாரத்துறை, கல்வித்துறையின் நவீனத்திட்டங்கள் இளைஞர்களக்கு எண்ணற்ற வாய்ப்புகளை வழங்கும்

உலகிலேயே தற்போது இந்தியாவில் தான் உள்கட்டமைப்பு மேம்பாடு வேகமெடுத்துள்ளது

அனைவருக்கும் இணையவசதி - மோடி

தேவேந்திரகுல வேளாளர் - அறிவிப்பு

7 உட்பிரிவுகளை சேர்ந்தோர் இனி தேவேந்திரகுல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் - மோடி

7 உட்பிரிவுகளை சேர்ந்தோரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் அரசியல் சாசன திருத்தம் நிறைவேற்றப்படும்

தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்புக்கு உதவியாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி

image

தேவேந்திர என்கிற பெயர் எனது பெயரான நரேந்திரவுடன் இசைந்து வருகிறது-மோடி

தேவேந்திர குல வேளாளர் எனும் அறிவிப்பு வெறும் பெயர் மாற்றம் அல்ல - மோடி

பெயர் மாற்றம் மூலம் 7 உட்பிரிவினருக்கு மதிப்பு மற்றும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கி கொடுத்துள்ளது

நல்லிணக்கம், நேசம், சகோதரத்துவத்தை கொண்டாடுபவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் - மோடி

இலங்கை தமிழர்கள் - மோடி உறுதி

இலங்கை தமிழர்களின் வாழ்வு மேம்பட மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும் - மோடி

இலங்கை தமிழர்களின் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒரே இந்திய பிரதமர் நான் தான் - மோடி

கடந்த கால அரசுகளை காட்டிலும் தற்போதைய மத்திய அரசு இலங்கைத்தமிழர்களுக்கு உதவி வருகிறது

இலங்கைத் தமிழர்களுக்காக சுமார் 50ஆயிரம் வீடுகளை மத்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது

இலங்கையில் தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது - மோடி

சென்னை - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை துவங்கியுள்ளது - மோடி

தமிழக மீனவர்கள் பிரச்சனை - மோடி உறுதி

தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒரு போதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது - மோடி

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர் - மோடி

தற்போது இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் ஒருவர் கூட இல்லை - மோடி

இலங்கை வசம் இருக்கும் சுமார் 300 படகுகளை இதுவரை திரும்பப் பெற்றோம் - மோடி

image

நண்பகல்: 12.20 மணி 

ரூ.1000 கோடியில் செங்கல்பட்டில் அமையும் சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகத்திற்கு அடிக்கல்

ஆவடியில் தயாரான அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கு நாட்டிற்கு அர்ப்பணிப்பு

அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கியை ராணுவத் தளபதி நரவானேவிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி

image

நண்பகல்: 12.10 மணி 

சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டம் துவக்கம்

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் இயக்கம் துவக்கம்

ரூ.400 கோடி செலவில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளும் துவக்கம்

ரூ.2640 கோடியில் கல்லணை கால்வாய் மறுசீரமைப்பு திட்டத்திற்கு மோடி அடிக்கல்

 

image

நண்பகல்: 12.00 மணி 

எனது அன்பு வேண்டுகோளை ஏற்று தமிழகம் வந்த மோடிக்கு நன்றி - இபிஎஸ்

சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத்திட்டங்கள் அறிவித்த பிரதமருக்கு நன்றி

கொரோனா தடுப்பூசியால் இந்தியாவிற்கு உலக அளவில் பாராட்டு கிடைக்கிறது

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு போதுமான நிதி அளித்துள்ளது - இபிஎஸ்

சென்னையில் தற்போது சுமார் 45கிமீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை நடைபெறுகிறது

புதிதாக சுமார் 9கிமீ தொலைவிலான மெட்ரோ ரயில் திட்டம் இன்று முதல் துவங்குகிறது

மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட திட்டத்திற்கு உரிய நிதி அளிக்க முன்வந்த பிரதமருக்கு நன்றி

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை வண்டலூர் வரை நீட்டிப்பதற்கான ஆய்வு நடைபெறுகிறது

கல்லணை கால்வாய் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வேண்டுகோள்

கல்லணை கால்வாய் திட்டத்தால் தஞ்சை, புதுக்கோட்டையில் 67ஆயிரம் ஏக்கர் பலன்பெறும்

ரூ.1000 கோடியில் ஐஐடி அமைக்கும் புதிய ஆராய்ச்சி வளாகத்திற்கு இன்று அடிக்கல்

image

காலை: 11.50 மணி 

பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர் மோடி - ஓபிஎஸ்

தமிழகத்தின் நலன் நாடும் தன்னிகரில்லா பிரதமர் மோடி - ஓபிஎஸ்

பல தலைமுறைகளாக நமது தேசம் கண்டிராத தன்னிகரற்ற தலைவர் மோடி - ஓபிஎஸ்

தமிழகத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருபவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ்

மத்திய அரசுக்கும் - மாநில அரசுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவது மெட்ரோ ரயில் திட்டம்

தமிழகத்திற்கு 2 முக்கிய ரயில் திட்டங்களை கொடுத்துள்ளதற்கு பிரதமருக்கு நன்றி

எதிர்கட்சியினராக இருந்தாலும் நல்லவற்றை பாராட்ட தவறாதவர் மோடி - ஓபிஎஸ்

image

காலை: 11.45 மணி 

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவுப்பரிசு வழங்கினார்

image

காலை: 11.40 மணி 

விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கிற்கு பிரதமர் மோடி வருகை

அர்ஜூன் மார்க் 1ஏ டாங்குகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கியின் சிறப்பம்சங்களை பிரதமர் மோடிக்கு விளக்குகின்றனர்

image

காலை: 11.30 மணி 

வழிநெடுக மோடிக்கு வரவேற்பு

ஐஎன்எஸ் கடற்படை தளம் முதல் நேரு விளையாட்டரங்கம் வரை மோடிக்கு வரவேற்பு

 ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் இருந்து நேரு விளையாட்டரங்கிற்கு மோடி சாலை மார்க்கமாக பயணம்

சுமார் ரூ.8,100 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்

ஆவடியில் தயாரான அர்ஜூனா மார்க் ஒன் டாங்கியை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் மோடி

காலை: 11 மணி

பிரதமர் மோடிக்கு வரவேற்பு

imageசென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் வரவேற்பு

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடற்படை தளத்திற்கு மோடி வருகை

ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு வரவேற்பு 

பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் எடப்பாடி வருகை

ஐஎன்எஸ் அடையாறு ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் பிரதமரை சந்திக்க முதல்வர் வருகை

காலை: 10.45 மணி

 

imageசென்னையில் பிரதமர் மோடி

டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை

டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் சென்னை வருகை

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படை தளம் புறப்பட்டார்

கடற்படை தளத்தில் இருந்து விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்திற்கு சாலை மார்க்கமாக மோடி செல்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments