மதுரையில் இரும்பு லோடு லாரியின் எடையை குறைக்க, எடை மேடை நிலையத்தில் சிப் வைத்து நூதன மோசடி; 3 பேர் கைது, 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

0 2577
மதுரையில் இரும்பு லோடு லாரியின் எடையை குறைக்க உரிமையாளருக்கு தெரியாமலே எடை மேடை நிலையத்தில் சிப் வைத்து நூதன மோசடி; 3 பேர் கைது, 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

துரையில் இரும்பு லோடு ஏற்றி வரும் லாரியின் எடையை குறைக்க எடை மேடை உரிமையாளருக்கு தெரியாமலே சிப் வைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

விரகனூர் சுற்றுச்சாலையில் யோகி என்பவர் நடத்தி வரும் லாரி எடை மேடை நிலைய கருவியின் உட்புறத்தில் வாகனத்தின் எடையை குறைக்கும் சிப் பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்ட்டது.

சிசிடிவியை ஆய்வு செய்ததில் கும்பல் சிப்பை பொருத்தி சென்றது தெரியவந்தது. மீண்டும் அந்த கும்பல் எடை மேடை நிலையத்திற்கு வந்து சிப்பை எடுத்து செல்ல முயற்சித்த போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்.

விசாரணையில் 3 பேரும் இரும்பு வியாபாரிகள் என்பதும், நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments