ஆந்திராவில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து-14 பேர் பலி

0 3362
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஹஜ்மீருக்கு, சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த டெம்போ வேன் கர்னூல் மாவட்டத்தில் மாதாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் சிக்கி நொறுங்கிய வேனில் பயணம் செய்தவர்களில் 8 ஆண்கள், ஒரு குழந்தை, ஐந்து பெண்கள் ஆகிய 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வாகனங்களையும், உயிரிழந்தவர்களையும் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments