ஹவுத்தி போராளிகளின் தாக்குதல் திட்டத்தை முறியடித்ததாக சவுதி அறிவிப்பு

தங்கள் நாட்டு விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் நடத்திய தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரி, தலைநகர் ரியாத் அருகே உள்ள அபா விமானநிலையத்தைக் குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த ஹவுத்தி போராளிகள் திட்டமிட்டதாகக் குறிப்பிட்டார்.
அவ்வாறு ஏவப்பட்ட ட்ரோனை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு சரியான நேரத்தில் கண்டுபிடித்து அழித்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஏமனில் போராடி வரும் ஹவுத்தி போராளிகள் மீது சவுதி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments