தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்து இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்து இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் 96 காசுகளாக விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 16 காசுகளாக விற்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது. கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
ஆனால் தற்போதைக்கு கலால் வரியை குறைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
Comments