குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பு வரை அலுவலக பணிகளை திறம்பட செய்த பெண் மேயர்..!

0 2175
குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பு வரை அலுவலக பணிகளை திறம்பட செய்த பெண் மேயர்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கர்ப்பிணி பெண் மேயர் ஒருவர், குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பு வரை அலுவலக பணிகளை அயராது கண்ணுங் கருத்துமாக செய்ததற்கு மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஜெய்ப்பூர் நகர் நிகாம் மேயராக டாக்டர் சவும்யா குர்ஜார் கடந்த புதன் அன்று நள்ளிரவு வரை மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். நள்ளிரவு 12.30 மணி அளவில் பிரசவ வலி எடுக்கவே அருகில் உள்ள குகுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு வியாழன் அதிகாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கடவுளின் அருளால் தாமும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments