”போலீஸ் கஸ்டடியின்போது நிகழ்த்தப்படும் வன்முறை” ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

0 1021
”போலீஸ் கஸ்டடியின்போது நிகழ்த்தப்படும் வன்முறை” ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

காவல்நிலையங்களில், போலீசாரின் விசாரணையின்போது, சம்பந்தப்பட்டவர்கள் உயிரிழப்பது, படுகாயம் அடைவது உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வெறுக்கத்தக்கச் செயலாகும் என்றும், உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

இவ்வாறான வன்முறைகள், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவிடும் என்றும், கவலை தெரிவித்துள்ளது. நமக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையினர், மிருகத்தன்மை ஏற்றால், அது பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments