இங்கிலாந்து வீரரிடம் “வலிமை” பட அப்டேட்.. அஜீத் ரசிகர்கள் குறும்பு..! அடுத்த வாரம் அஜீத் டப்பிங்..!

0 4458

நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை படம் தொடர்பான தகவல்களை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடாத நிலையில் போவோர் வருவோரிடமெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அடம் பிடித்து வரும் அஜீத் ரசிகர்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியிடமும் வலிமைப்படத்தின் அப்டேட் கேட்டு குறும்பு செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில், அஜீத் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. வெளி நாட்டில் 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் லண்டனில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே படத்தின் எடிட்டிங் பணிகளை தீவிரப்படுத்தி முடித்துள்ள இயக்குனர் எச். வினோத் டப்பிங் பணிகளையும் தொடங்கி இருக்கின்றார். அடுத்த வாரம் அஜீத் டப்பிங் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் படத்தின் மோசன் போஸ்டரோ, படம் தொடர்பான கூடுதல் தகவல்களோ வெளியிடாததால் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தயாரிப்பாளர் போனிகபூரிடம் கோரிக்கை வைத்து வரும் அஜீத் ரசிகர்கள், அதனை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். அந்தவகையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமர்ந்து கடிதங்களை கிழித்து படித்து வரும் ஜி.பி முத்து தொடங்கி இண்டர் நேசனல் கிரிக்கெட் வீரர்களை கூட விட்டு வைக்காமல் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜீத் ரசிகர்கள் கடும் அமர்களம் செய்து வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு கிரிக்கெட் பார்க்க சென்ற அஜீத் ரசிகர்கள் சிலர் வழக்கம் போல அங்கும் கையில் வலிமை அப்டேட் என்ற பதாகையை உயர்த்திப் பிடித்தனர்.

சில ரசிகர்களோ இன்னும் ஒரு படி மேலே போய், பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயீன் அலியை, அலிபாய் என்று உரிமையோடு அழைக்க, அவர் சிரித்த முகத்துடன் திரும்பி பார்த்ததும், வலிமை படத்தின் அப்டேட் கேட்டது தான் அஜீத் ரசிகர்களின் ஹைலைட் குறும்பு..!

இதற்கு முன்பாக சில ரசிகர்கள் பிரச்சார கூட்டத்திற்கு சென்று திரும்பிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு கோஷமிட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

அதே நேரத்தில் ஒரு சினிமா படத்தின் அப்டேட்டுக்காக அஜீத் ரசிகர்கள் செய்யும் அட்ராசிட்டிகள் எல்லைமீறிச் சென்று வரும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஒரு நல்ல நாள் பார்த்து அஜீத்தின் வலிமையை காட்டி வரும் தங்களுக்கு வலிமைப் படத்தின் அப்டேட்டை கொடுத்தால் ஏக்கம் தீரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments