”சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம்” - பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

0 3210
”சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம்” - பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம்.

வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான, மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்க உள்ளார்.

இதையொட்டி, இன்று மதியம், 2:00 மணியில் இருந்து, இரவு, 11:00 மணிவரை, மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்ய, நிர்வாகம் அனுமதித்துள்ளது.

இதன்வாயிலாக, விமான நிலையம் - திருவொற்றியூர் விம்கோநகர், பரங்கிமலை - சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயிலில், பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments