ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தீவில் நிலநடுக்கம்..டோக்கியோவிலும் அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் பீதி..!

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியான நாமிய் அடுத்த கடல் பகுதியில் ரஷ்யாவின் வசம் உள்ள ஒரு தீவு அருகில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியான நாமிய் அடுத்த கடல் பகுதியில் ரஷ்யாவின் வசம் உள்ள ஒரு தீவு அருகில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இது ஏழாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை, நில நடுக்கத்தின் அதிர்வுகள் டோக்கியோவில் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகளும் சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்தடையும் ஏற்பட்டது.
ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. பாதிப்புகளைக் கண்டறிய அதிகாரிகள் குழு ஒன்று களம் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
மியாகி புகுஷிமா போன்ற சில பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து கடும் பொருட்சேதம் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் உயிர்ச்சேதம் பற்றிய தகவல் ஏதுமில்லை.
Comments