காரில் கடத்தி வரப்பட்ட நடராஜர் சிலை: பத்திரமாக மீட்ட போலீசார்

தேனி மாவட்டம் போடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட நடராஜர் சிலையை போலீசார் மீட்டனர்.
ஆண்டிப்பட்டியில் இருந்து போடிக்கு காரில் சிலை கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மாருதி கார் ஒன்று நிற்காமல் சென்றுள்ளது.
காரை விரட்டிப் பிடித்தபோது, அதில் சுமார் 3 அடி உயர நடராஜர் சிலை இருந்தது. சிலையை மீட்ட போலீசார், காரை ஓட்டி வந்த மணிகண்டன் என்பவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிலை கடத்தல் தடுப்பு சிறப்புப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வந்து சோதனை செய்த பிறகே அது ஐம்பொன் சிலையா, வெண்கல சிலையா என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
Comments