புதிய வேளாண் சட்டம் பற்றி தெரியாமல், அறியாமல் ராகுல் காந்தி பேசி வருவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் சாடல்

0 2139
புதிய வேளாண் சட்டம் பற்றி தெரியாமல், அறியாமல் ராகுல் காந்தி பேசி வருவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் சாடல்

புதிய வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் குறித்து தெரியாமலும், அதுபற்றி தெரிந்து கொள்ளாமலும், மனம்போன போக்கில், ராகுல் காந்தி, பேசி வருவதாக, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சாடியுள்ளார்.

பரம்பரை வாரிசு அரசியல் வழிவந்த ராகுலுக்கு, விவசாயிகள் பற்றியும், அவர்தம் துயரம் குறித்தும் என்ன தெரியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆவேசமாக பேசும் ராகுல் காந்தியின் பேச்சைக் கூட, காங்கிரஸ் கட்சியினர், சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் தோமர் குறிப்பிட்டார்.

விவசாயிகள் விரும்பினால், பேச்சுவார்த்தை நடத்த, திறந்த மனதுடன், காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments