நாடாளுமன்ற மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு

0 937
நாடாளுமன்ற மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு

நாடாளுமன்ற மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடருக்கான மக்களவை கூடியது.

ஒன்றாம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், பிரதமரின் பதிலுரை, பட்ஜெட் மீதான விவாதம் ஆகியவை நடைபெற்றன.

இந்நிலையில் காஷ்மீர் மற்றும் ஜம்முவை யூனியன் பிரதேசங்களாக அறிவித்த தற்கு அங்கீகாரம் வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இதையடுத்து மார்ச் 8 ஆம் தேதிக்கு அவை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments