ரூ. 100.87 கோடி மதிப்பீட்டில் கட்டிய காவல்துறைக் கட்டிடங்கள்: காணொலியில் திறந்து வைத்தார் முதலமைச்சர்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட காவல்துறைக் கட்டடங்களையும், வணிக வரித்துறை மற்றும் பதிவுத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூறு கோடியே 87 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
681 காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், காவல்துறைக் கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையக் கட்டடங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் சென்னை நொளம்பூரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகக் கட்டடம், நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூர், திருவண்ணாமலை மாவட்டம் - கடலாடி, மங்கலம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
Comments