தமிழகத்தின் 8 மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
2 பேரால் 2 பேருக்காக ஆட்சி நடத்தியது காங்கிரஸ் தான் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2 பேரால் 2 பேருக்காக ஆட்சி நடத்தியது காங்கிரஸ் தான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அவர், கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்ல இந்த பட்ஜெட் உதவும் என்றார்.
இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்ல, மத்திய பட்ஜெட் வழிவகுக்கும் என்ற அவர் நாட்டின் நீண்ட கால வளர்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ள புதிய சீர்திருத்தங்கள் தேவை என்றார்.
மத்திய அரசு எங்கும் எதற்காகவும் கடன் வாங்க விரும்பவில்லை என்றும் இந்திய பொருளாதாரத்தின் மீதும் தொழில் வணிகத் திறன் மீதும் பாஜக அரசுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Comments