பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய், தந்தையை இழந்த மாணவி : அரசு உதவி புரிய கோரிக்கை

0 3046
பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய், தந்தையை இழந்த மாணவி : அரசு உதவி புரிய கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில், தாய், தந்தை என இருவரையும் இழந்து நிற்கும், 7-ம் வகுப்பு மாணவிக்கு அரசு உதவி புரிய கோரிக்கை எழுந்துள்ளது.

சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த கணவன் - மனைவியான பாக்கியராஜ் - செல்வியும்  அச்சங்குளத்தில் நேற்று நடந்த பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களது 12 வயது மகள் நந்தினி, சாத்தூர் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தாய், தந்தையை இழந்து உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். 

விருதுநகர் மாவட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாணவிக்கு 11 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments