பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்கு வருகை

0 2418
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்கு வருகை

நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மெட்ரோ ரயில், மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைத் திட்டங்களைத் தொடங்கி வைப்பத்துடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.  

டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளத்துக்கு வருகிறார்.

அங்கிருந்து காரில் பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கத்துக்குச் செல்கிறார்.

அங்குப் பகல் 11 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று வண்ணார்ப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் சேவை, சென்னைக் கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான நான்காவது ரயில்பாதை,  விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்கிறார்.

கல்லணைக் கால்வாய் புதுப்பிக்கும் திட்டம், இந்தியத் தொழில்நுட்பக் கழக டிஸ்கவரி வளாகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள அர்ஜுன் வகை பீரங்கியை ராணுவப் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கிறார்.

நிகழ்ச்சிக்குப் பின் காரில் ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் விமான நிலையத்துக்குச் சென்று, விமானத்தில் கொச்சிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments