'என் காலத்துக்குப் பிறகு அவன் கஷ்டப்படக் கூடாது'- வளர்ப்பு நாய் மீது ரூ. 36 கோடி சொத்துக்களை எழுதி வைத்த அமெரிக்கர்!

0 3061

தான் பாசமாக வளர்த்த நாய், தனக்குப் பிறகு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, 36 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நாய் மீது எழுதி வைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பாசக்கார நாய் உரிமையாளர் ஒருவர். நாய் உரிமையாளர் கடந்த ஆண்டே இறந்துவிட்டாலும், சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவதால், 36 கோடி ரூபாய்க்கு சொந்தமான நாய் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவின் டென்னிசிஸ் பகுதியில் நாஷ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் பில் டோர்ரிஸ். 84 நான்கு வயதான பில் டோர்ரிஸ் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், தனது தொழிலில் வெற்றிகரமானவராகத் திகழ்ந்தார். சுமார் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அளவுக்கு சொத்துள்ள பில் டோரிஸ் யாரையும் தத்தெடுத்து வளர்க்கவில்லை. அவருக்கு நண்பன், சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இருந்தது லுலு எனும் Border Collie இன நாய் மட்டுமே.

பில் டோர்ரிஸ் எங்கு சென்றாலும் லுலுவுடன் செல்வது தான் வழக்கம். ஒரு நிமிடம் கூட லுலுவை விட்டு அவர் பிரிந்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு லுலுவை நேசித்தார் பில் டோர்ரிஸ்.

84 வயதான, முதுமையால் வாடிய பில் டோர்ரிஸ், தனது இறுதிக்கால, நெருங்கியதை உணர்ந்ததும் தான் நேசித்த லுலு, தன் காலத்துக்கு பிறகு துன்பப் படக்கூடாது என்பதற்காக 5 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் லுலு மீது உயில் எழுதிவைத்தார். தான் எழுதிவைத்த உயிலில், “இந்த உயில் லுலுவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கானது. எனது சொத்து அனைத்தையும் லுலு பெயருக்கே எழுதிவைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது, லுலுவைப் பார்த்துக்கொள்ள அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளை லுலுவுக்குத் தேவையானதை பில் டோர்ரிஸின் சொத்துக்கள் மூலம் செய்து வருகிறது.

பில் டோர்ரிஸின் நிலம் மற்றும் பண்ணை வீட்டின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று அறக்கட்டளை மூலம் மதிப்பிடப்பட்டு வருகிறது. அந்த பணி முடிந்ததும் லுலுவின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும், பில் டோர்ரிஸ் எங்கெங்கு முதலீடு செய்துள்ளார் என்றும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments