இஸ்ரோ தலைவர் சிவன் மகனுக்கு இஸ்ரோவில் முறைகேடாக பணிநியமனமா?

0 48153
இஸ்ரோ தலைவர் சிவன், விதிகளை மீறி தமது மகனுக்கு இஸ்ரோவில் பணி நியமனம் வழங்கியதாக கூறப்பட்ட புகாரை மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் பதிவு செய்துள்ளது.

இஸ்ரோ தலைவர் சிவன், விதிகளை மீறி தமது மகனுக்கு இஸ்ரோவில் பணி நியமனம் வழங்கியதாக கூறப்பட்ட புகாரை மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் பதிவு செய்துள்ளது.

சிவனின் மகனான சித்தார்த் என்பவர் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் திரவ எரிபொருள் திட்ட மையத்தில் விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டார்.

இந்த பதவிக்கு பிஇ அல்லது பிடெக் தகுதி மட்டுமே தேவை என விதிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் சிவனின் மகன் எம்டெக் பட்டதாரி என்பதால், இந்த பதவிக்கு எம்டெக்கும் தகுதியாக சேர்க்கப்பட்டு அவர் அந்த பணியில் நியமிக்கப்பட்டார் என மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு புகார் வந்தது.

இஸ்ரோவில் இயக்குநராக இருக்கும் நாராயணன் என்பவர் இந்த முறைகேட்டுக்கு உதவினார் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள சிவனின் அலுவலக அதிகாரிகள் எல்லா நடைமுறையும் முறையாக பின்பற்றப்பட்டே சித்தார்த்தின் நியமனம் நடந்துள்ளதாகவும், அதில் சிவனின் தலையீடு எதுவும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments