ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்.. ரஜினி வசனம் பேசிய மு.க.ஸ்டாலின்..!

0 7153
ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்.. ரஜினி வசனம் பேசிய மு.க.ஸ்டாலின்..!

தான் சொல்வதைத்தான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்கிறார் என, ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்பட பாணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் அளவளாவி, கலந்துரையாடி, குறைகளை கேட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

திமுக ஆட்சியில் விருத்தாசலம் தனி மாவட்டமாக உருவாக்கி தரப்படும் என அவர் உறுதியளித்தார். ரஜினி திரைப்பட வசனமான ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான் என்பது போல, தான் சொன்னதைத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்கிறார் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

விவசாயக் கடனை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றத்துக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, தற்போது வாய்க்கு வந்தபடி அறிவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

உலகத்திலேயே கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி செய்த ஒரே கட்சி திமுக தான் எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், கொரோனா காலத்தில் அனைத்து டெண்டரிகளிலும் அதிமுக அரசு ஊழல் செய்ததாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments