காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்... மணல் திருட திருடி 2 ஆண்டுகளாக போலீஸை சுற்ற விட்டவர் கைது!

0 5490

ஆரணி அருகே மணல் திருடியதால் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தனது டிராக்டரை,  திருடிய நபரை இரண்டு ஆண்டுகள் கழித்து ஆரணி போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துக்கொண்டு கமண்டலநாகநதி மற்றும் செய்யார் ஆற்றுபடுக்கையில் அனுமதியின்றி மணல் அள்ளி விற்பனை செய்து வந்துள்ளார்.

ரகசிய தகவலின் அடிப்படியில், கடந்த 2019ஆம் ஆண்டு சந்தோஷை கைது செய்த ஆரணி போலீசார், திருட்டு மணலுக்கு பயன்படுத்தி வந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனர் .

சிறைவாசம் அனுபவித்தும் திருந்தாத சந்தோஷ் பழைய குருடி கதவை திறடி என்பது போல் மீண்டும் மணல் கடத்தும் தொழிலில் ஈடுப்பட முயன்றுள்ளார். மணல் திருட ஐடியா மட்டும் இருந்து என்ன பண்ண.. டிராக்டர் இல்லாமல் தடுமாறியுள்ளார். இதனால், போலீஸால் பறிமுதல் செய்யப்படட டிராக்டரை திருட திட்டமிட்டுள்ளார்.  சந்தோஷின் டிராக்டரை ஆரணி காவல் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த டிராக்டரை சுற்றிலும் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அவரால் திருட முடியவில்வலை.இதனால், போலீஸ் நிலையத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றோரு டிராக்டரை கடந்த 2019 ஆம் ஆண்டு சந்தோஷ் திருடி சென்று விட்டார். 

றிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் போலீசாரின் கவனக்குறைவால் காணாமல் போனதாக 3 காவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் துறை ரீதியான தண்டனை வழங்கியுள்ளனர். மேலும் , காவல் நிலையம் அருகே தொலைந்து போன டிராக்டரை கண்டு பிடித்து தருமாறு காவல் துறைக்கு காவல் துறையினரே புகார் மனுவையும் கொடுத்துள்ளனர். இந்த புகாரையடுத்து, போலீஸார் டிராக்டரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்தநிலையில் ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் முள்ளிப்பட்டு பகுதியில் சோதனை தனிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டிராக்டரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆரணி காவல் நிலையத்தில் திருடப்பட்ட டிராக்டர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து , சந்தோஷை மடக்கிய போலீஸார் அவரை ஆரணி சிறையில் அடைத்தனர். 

காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை திருடிய வழக்கில் இரண்டு ஆண்டுகளாக போலீசாருக்கு தண்ணீ காட்டி வந்த சந்தோஷ்  தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்ட இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments