கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் இம்மாத இறுதியில் திறப்பு: நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு அதிகாரிகள் தகவல்

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் இம்மாத இறுதியில் திறப்பு: நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு அதிகாரிகள் தகவல்
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலைய திறப்பு விழா இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு 36ஆயிரத்து 200 சதுர அடி பரப்பில் 11 நடைமேடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு அதிகாரிகள், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் யாவும் நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் திறந்து வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நேரில் பார்வையிட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
Comments