நீலகிரியில் 3 பேரை கொன்ற யானை பிடிபட்டது

0 5865
நீலகிரியில் 3 பேரை கொன்ற யானை பிடிபட்டது

நீலகிரியில் மூன்று பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை மயக்க ஊசி செலுத்தி வனத் துறையினர் பிடித்தனர்.

பந்தலூர் பகுதியை சேர்ந்த 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடிக்க முயற்சி செய்த நிலையில் அடர்ந்த வனப் பகுதிக்குள் யானை தப்பி ஓடியது.

கேரள மாநிலம் நிலம்பூர் வன பகுதியில் யானை உலா வருவதை அறிந்த தமிழக வனத் துறையினர், கேரள வனத் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

மேலும் முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு யானையை கொண்டு செல்ல வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments