திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி திடீர் ராஜினாமா

திரிணாமூல் காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்திருப்பதையடுத்து அவரை பாஜகவில் இணையுமாறு அக்கட்சியின் எம்பியும் பாடகருமான பாபுல் சுப்ரியோ அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்தடுத்து பல முக்கியத் தலைவர்களின் ராஜினாமாவால் ஆடிப்போயிருக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ராஜினாமா செய்வதாக தினேஷ் திரிவேதி அறிவித்தார்.
திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவர்கள் விமர்சித்துள்ள நிலையில், திரிவேதி பாஜகவில் இணைவதற்கான சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
Comments