ஹரியானாவில் மல்யுத்த பயிற்சி மையத்தில் துப்பாக்கிச் சூடு: 2 மல்யுத்த வீராங்கனைகள், பயிற்சியாளர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு

0 821
ஹரியானாவில் மல்யுத்த பயிற்சி மையத்தில் துப்பாக்கிச் சூடு: 2 மல்யுத்த வீராங்கனைகள், பயிற்சியாளர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு

ரியானா மாநிலம் ரோட்டக்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 மல்யுத்த வீராங்கனைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தனியார் கல்லூரி அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்த இருவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணையை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.இந்தப் படுகொலைகளுக்கு முன்பகை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments