நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..! பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..! பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்
நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
3770 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைக்கிறார். நவீன அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பார்.
2640 கோடி செலவில் கல்லணை கால்வாயை புதுப்பித்து, நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
1000 கோடி ரூபாய் மதிப்பில் செங்கல்பட்டு மாவட்டம் தையூர் என்னுமிடத்தில், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் ஐஐடி டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
Comments