இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு..

0 2564
மத்திய ஆசிய நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

தஜகிஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

தஜகிஸ்தானில் உள்ள முர்காப் என்ற இடத்தை மையமாகக் கொண்டு பூமிக்கடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 3 ஆக பதிவானது. இந்தநிலையில் தஜகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிலும் உணரப்பட்டன. இருப்பினும் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனைக் கண்ட மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு பொதுவெளியில் தஞ்சமடைந்தனர்.

இதனையடுத்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார். பஞ்சாபின் எந்தப் பகுதியிலும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments