அர்ஜூன் மார்க் 1ஏ பீரங்கிகளை பிரதமர் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

பிரதமர் மோடி அர்ஜூன் மார்க் 1 ஏ பீரங்கிகளை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் மோடி அர்ஜூன் மார்க் 1 ஏ பீரங்கிகளை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில், 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புடைய 118 நவீன பீரங்கிகள் ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட உள்ளன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ (DRDO) இந்த அதி நவீன பீரங்கியின் வடிவமைப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.
சென்னையில் நடைபெறும் விழாவில் இந்த பீரங்கிகளை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
ஏற்கனவே 124 அர்ஜூன் பீரங்கிகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் 118 பீரங்கிகள் இணைக்கப்பட உள்ளன.
Comments