இந்தியாவில் இதுவரை 77.66 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம்

0 704

இந்தியாவில் இதுவரை 77 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 58 லட்சத்து 65 ஆயிரம் பேர் சுகாதாரப் பணியாளர்கள் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சகத்தின் இணை செயலாளர் மன்தீப் பண்டாரி தெரிவித்தார். மொத்த சுகாதாரப் பணியாளர்களின்  எண்ணிக்கையில் இது 58.9 சதவீதம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதே போன்று முன்களப் பணியாளர்களில் 19 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இது நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கில் 21 சதவீதம் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments