சென்னை கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்

0 2844

சென்னையில் 13 ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காணோலி மூலமாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், பந்து வீச்சாளர் ஜெப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை என்றார்.

ஜோஸ் பட்லருக்கு அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். டாம் பெஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரும் இரண்டாவது டெஸ்டில் இடம் பெற மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

பென் போக்ஸ் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments