நாடு முழுவதும் இரண்டாம் கட்டத் தடுப்பூசி இயக்கம் நாளை தொடக்கம்..!

0 1593

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசி போடும் இயக்கம் நாளை தொடங்க உள்ளது.

இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடும் இயக்கம் ஜனவரி 16ஆம் நாள் தொடங்கியது.

முதல்முறை தடுப்பூசி போட்டவர்கள் அடுத்த 28ஆவது நாளில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜனவரி 16ஆம் நாளன்று தடுப்பூசி போட்டுக் கொண்ட 3126 பேருக்கு நாளை இரண்டாவது தவணைத் தடுப்பூசி போடப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments