பயிர் கடன் ரத்து ரசீதை நாளை வழங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 4529

பயிர் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சனிக்கிழமை வழங்கி துவக்கி வைக்க இருக்கிறார்.

கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அதற்கான அரசாணையும் தமிழக அரசு  சார்பாக வெளியிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பயிர்க் கடனை ரத்து செய்வதற்கான ரசீதை விவசாயிகளிடம் கொடுத்து துவக்கி வைக்க உள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments