நீலகிரி : மூன்று பேரை கொன்ற சங்கர் யானை பிடிபட்டது!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி அருகே 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானை சங்கர், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.. யானையை மீட்க ஜேசிபி இயந்திரம் மூலம் பணி நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம் காட்பாடியில் உள்ள சங்கர் யானை மூன்று பேரை கொன்றது. ஆகவே அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் கடந்த சில நாட்களாக முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில் 5-வது நாளாக நேற்று புஞ்ச கொல்லி பகுதியில் சங்கர் யானை கூட்டத்துடன் நிற்பதை வனத்துறையினர் கண்டனர்.
அதன்பிறகு வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதைதொடர்ந்து 45 நிமிடங்களில் மற்றுமொரு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தனர். ஆனால் கூட்டத்தில் இருந்த இரண்டு பெண் யானைகள் சங்கர் யானையின் மீது ஊசியை செலுத்த முடியாதவாறு மறைத்து நின்று கொண்டது. அப்போது சங்கர் யானை சிறிது மயக்கத்தில் இருந்தது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சங்கர் யானைக்கு மயக்கம் தெரிந்தது. பின்னர் அருகில் இருந்த இரண்டு பெண் யானைகளும் சங்கர் யானை அழைத்துக்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இருப்பினும் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது சங்கர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர். யானையை லாரியில் ஏற்றி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Comments