கேந்திரிய வித்யாலாயாவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான இடங்களை விற்பனை செய்யும் திமுக எம்பிக்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜு

0 1345

த்திய அரசின் கேந்திரிய வித்யாலாயா பள்ளியில் மக்கள் பிரதிநிதிகளுக்கான இடங்களை தலா, 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்ச ரூபாய் வரை திமுக எம்.பிக்கள் விற்பனை செய்வதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்‍.

தூத்துக்குடி மாவட்டம் தோணுகாலில் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்தப் பள்ளியில் தமிழ் புறக்கணிப்படுவதாகக் கூறும் எம்பிக்கள், தங்களுக்கு அந்த பள்ளியில் ஒதுக்கீடு வேண்டாம் என மறுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments