இந்தியா எல்லைப் பகுதி எதையும் சீனாவிடம் விட்டுக் கொடுத்துவிடவில்லை-பாதுகாப்புத்துறை

படை விலக்க உடன்பாட்டின் மூலம், இந்தியா எல்லைப் பகுதி எதையும் சீனாவிடம் விட்டுக் கொடுத்துவிடவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
படை விலக்க உடன்பாட்டின் மூலம், இந்தியா எல்லைப் பகுதி எதையும் சீனாவிடம் விட்டுக் கொடுத்துவிடவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து ராகுல்காந்தி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், பாங்காங்சோ ஏரிப் பகுதியில், இந்தியாவின் எல்லை ஃபிங்கர் 4 பகுதி வரையே எனக் கூறுவது முற்றிலும் தவறு என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவின் எல்லை ஃபிங்கர் 8 பகுதி வரை உள்ளது என்றும், அதுவரை ரோந்து மேற்கொள்ளும் உரிமையை, தற்போது எட்டப்பட்ட உடன்பாடு வரை இந்தியா கட்டிக்காத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் 1962ஆம் ஆண்டிலிருந்து, 43 ஆயிரம் சதுரகிலோமீட்டர் பகுதி சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments