தமிழகம், புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் - சுனில் அரோரா

0 3358
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, பட்ஜெட் ஆகியவற்றில் வாக்களிக்க உரிமை உள்ளது என்றார்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக 7 நாட்கள் அவகாசம் அளித்து சரி செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 952-ல் இருந்து 1564 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுனில் அரோரா தெரிவித்தார்.

புதுச்சேரியில் வேட்பாளர் செலவுத்தொகை 20 லட்ச ரூபாயிலிருந்து 22 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments