முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்கக் கோரிய கேரள நபரின் மனு தள்ளுபடி

0 602
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்கக் கோரிய, கேரள மாநில நபரின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்கக் கோரிய, கேரள மாநில நபரின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரசூல் ஜாய் என்பவர், உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், அணை பாதுகாப்பு, கண்காணிப்புத் துணைக்குழுவை கலைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்க வேண்டும் என்றும் கோரிய அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இருப்பினும், அணை பாதுகாப்பு உள்ளிட்டவைத் தொடர்பான மற்றொரு மனுவுக்கு பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments