பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வராத நண்பர் நடு ரோட்டில் 3 முறை காரை ஏற்றி கொலை ... தெலங்கனாவில் நடந்த கொடூரம்!

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வராததால் நண்பரை சக நண்பரே காரை ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இவர், அப்பகுதியில் ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வருகிறார். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது நெருங்கிய நண்பரான சின்னா என்பவர், ரமேஷை தொடர்புகொண்டு தமது வீட்டில் நடைபெறும் பிறந்த நாள் விழவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் ரமேசோ தனது நண்பர்களுடன் மது நடந்து கொண்டிருப்பதால், நீயும் வா சின்னா குடிக்கலாம் என மது விருந்திற்கு அழைத்துள்ளார். இதனை அடுத்து சின்னாவும் ரமேஷ் அண்ட் கோவோடு ஐக்கியம் ஆகியிருக்கிறார். பல மணி நேரத்திற்கு பிறகு விருந்து முடிவுக்கு வந்துள்ளது. சின்னா தனது வீட்டிற்கு கிளம்புகையில், ரமேசை மீண்டும் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்துள்ளார். ஆனால் ரமேஷ் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சின்னா, தனது காரில் ஏறி ரமேஷ் மீது மோதியுள்ளார். பின்னர் ரிவர்சில் வந்து காரை மீண்டும் ரமேஷ் மீது ஏற்றியுள்ளார். காரை இவ்வாறு மூன்று முறை ரமேஷ் மீது ஏற்றிவிட்டு அங்கிருந்து சின்னா தப்பிச் சென்றார். உடனிருந்த நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரமேசை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ரமேசை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் , கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சின்னாவை தேடி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வராத காரணத்தால், நண்பனை சக நண்பரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments