பிளிப்கார்ட் அலுவலகத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கிய குடிகார கும்பல்

0 6407
பிளிப்கார்ட் அலுவலகத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கிய குடிகார கும்பல்

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குடிகார கும்பல் ஒன்று பிளிப்கார்ட் டெலிவரி அலுவலத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீநகரில் இயங்கிவரும் பிளிப்கார்ட் டெலிவரி அலுவலக வாசலில் அமர்ந்து கடந்த 9ஆம் தேதி இரவு 5 பேர் கொண்ட ஒரு கும்பல் மது அருந்தி இருக்கின்றனர்.

சூர்யா என்ற ஊழியர் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரத்தில் இருந்த அந்த கும்பல் மறுநாள் மாலை குடிபோதையில் அலுவலகத்துக்குள் புகுந்து சூர்யாவை சட்டை கிழியும் அளவுக்கு தாக்கினர்.

அலுவலக பொருட்களை சூறையாடிய அந்தக் கும்பல், கல்லாவில் வைத்திருந்த 6 ஆயிரத்துக்கு 800 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சரவணன், அரவிந்தன், மனோ, அபினேஷ்,தினேஷ் என்ற அந்த 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments