வெளிநாட்டில் இருந்து வந்து செயின் பறிப்பில் ஈடுப்பட்ட திருடன்... தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

0 2431

ராமநாதபுரத்தில் வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட திருடன் தப்பிக்க முயன்ற போது காயமடைந்ததால் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பட்டாபி சீதாராமன் தெருவில் வசித்து வருபவர்கள் ஹரிகிருஷ்ணன் - சர்மிளா தம்பதியினர். ஹரிகிருஷ்ணன் ராமநாதபுரம் மின்வாரிய அலுவலகத்தில் போர் மேன் பணியாளராக வேலை செய்து வருகிறார். அவர் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டபின் வீட்டில் அவரது மனைவி சர்மிளா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் புகுந்த திருடன் ஒருவன் தனியாக இருந்த சர்மிளாவை தாக்கியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அவரது கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளான். அதற்குள் திருடனிடம் இருந்து தப்பிக்க சர்மிளா கூச்சலிட்டதால் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் முன் திரண்டனர். இதனால் பதற்றமடைந்த திருடன் தான் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து  யாரும் அருகில் வந்தால் குத்தி விடுவதாக மிரட்டியுள்ளான்.

யாரும் தன்னை பிடிக்க அருகில் வராததால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட திருடன் வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்து தெரு வழியாக தப்பி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்த திருடன் எழ முடியாமல் தவித்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட பொதுமக்கள் திருடனைப் பிடித்து தர்ம அடிக் கொடுத்து பின்னர் பரமக்குடி நகர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தப்பிச் செல்ல முயன்ற போது காயமடைந்த திருடனை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பரமக்குடி நகர் போலீசார் தொடர் விசாரணை செய்தனர். விசாரணையில் நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டவர் பரமக்குடி அருகே உள்ள கொழுந்துறை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் திருமுருகன் என்று தெரிய வந்தது, இவர் வெளிநாட்டில் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில் இன்று காலையிலேயே மதுபோதையில் இருந்த திருமுருகன் தனியாக இருந்த பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசாரிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments