2 எம்.டெக்., படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க முடியாது, AICTE சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

0 2751
அண்ணா பல்கலைக்கழகத்தில், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட 2 எம்.டெக்., படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க முடியாது என AICTE, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட 2 எம்.டெக்., படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க முடியாது என AICTE, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, AICTE சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2 எம்டெக் படிப்புகளை தொடங்குவதற்கான காலஅவகாசம் கடந்த ஆண்டு டிசம்பரோடு நிறைவடைந்து விட்டதால் தற்போது அனுமதி அளிக்க முடியாதென தெரிவித்தார்.

அரிதான சூழலை கருத்தில் கொண்டு இது தொடர்பாக AICTE யிடம் கேட்டு மீண்டும் பதில் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஏன் இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமோ மாநில அரசோ உச்ச நீதிமன்றத்தை நாடி தீர்வு காணக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments