பேத்தியின் பி. எட் படிக்கும் கனவு... மும்பையை கண்ணீர் விட வைத்த தாத்தாவின் தியாகம்!

0 17305

மும்பை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கடந்த ஒரு வருடகாலமாக, வீடின்றி, ஆட்டோவில் தங்கியிருந்த செய்தி, சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்குப் பலரும் உதவிக் கரங்களை நீட்டி வருகின்றனர்.

மும்பையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேஸ்ராஜ். தனது இரு மகன்களையும் இழந்த பிறகு, மனைவி, மருமகள், மற்றும் 4 பேரப் பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வந்தார்.

தனது குடும்ப நலனுக்காக, முதுமையிலும் அயராது பாடுபடும் தேஸ்ராஜ், காலை 6 மணி தொடங்கி நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டுவார். தனது தாத்தாவின் கஷ்டத்தைக் கண்டு மனமுடைந்த அவர் பேத்தி, நான் படிப்பை நிறுத்தி விடவா என்று கேட்டுள்ளார். அந்த கேள்வியைச் சற்றும் எதிர்பாராத தேஸ்ராஜ், பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டாம் என்றும், விரும்பிய படிப்பினை படிக்கலாம் என்றும் பேதிக்கு உறுதியளித்தார். பேத்திக்கு அளித்த  வாக்குறுதியை நிறைவேற்ற முதுமையிலும் கடுமையாக உழைக்க தொடங்கினார்.

தாத்தாவின் உழைப்பை உணர்த்தப் பேத்தியும், அக்கறையுடன் படித்து, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண் எடுத்தார். இதனால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த தேஸ்ராஜ், தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில் பயணிகள் அனைவருக்கும் இலவச சவாரி வழங்கினார். தேஸ்ராஜின் பேதிக்கு பி.எட் படிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.

இதை தொடர்ந்து, தங்கியிருந்த வீட்டையும் விற்று ,தனது பேத்தியின் கல்லூரி கட்டணத்தை செலுத்திய தேஸ்ராஜ், தனது குடும்ப உறுப்பினர்களை கிராமத்திலுள்ள உறவினர்கள் வீட்டில் தங்க வைத்துள்ளார். மும்பையில் ஆட்டோவே அவருக்கு வீடாகிப் போனது.  தனது ஆட்டோவில் வாழ தொடங்கினர். ஆட்டோவில் தான் உணவு உண்பார், ஆட்டோவில் தான் தூங்குவார்.

இப்படியே ஒரு வருட காலம் ஓடிவிட, அண்மையில் தேஸ்ராஜின் கதை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து பலரும் ஆட்டோ ஓட்டுநர் தேஸ்ராஜை வருகின்றனர்.தொடர்ந்து, சுமார் 5 .3 லட்சம் ரூபாய் தேஸ்ராஜின் குடும்பத்திற்காக நிதி திரட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments