உதகையில் ’புதுவெள்ளை மழை பொழிகிறது’ என பாடத் தூண்டும் வெண்பனி

0 19363
உதகையில் புல்வெளிகள் மீதும், விவசாய நிலங்கள் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் உறைபனி காணப்படுகிறது.

உதகையில் புல்வெளிகள் மீதும், விவசாய நிலங்கள் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் உறைபனி காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் துவங்கும் உறைபனிப் பருவம், பிப்ரவரியில் விலகத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் பனிப்பொழிவின் தாக்கம் நேற்று முதல் அதிகரித்து காணப்படுகிறது.

உறைபனியின் தாக்கத்தால் உதகை தாவரவியல் பூங்காவில் குளிர்நிலை பூஜ்யம் டிகியை தொட்டது. மிதமிஞ்சிய கடுங்குளிரால் புல்வெளிகள், விளைநிலங்களும் வாடிக்கிடக்கின்றன.

தலைகுந்தா புல் வெளி வெள்ளை கம்பளம் போர்தியது போல் காணப்பட்டது.காந்தல், குன்னூர், ஜிம்கானா உள்ளிட்ட பகுதிகளிலும் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

புதுவெள்ளை மழை பொழிகிறது என உறைபனி கண்ணுக்கு இனியதாக காட்சியளித்தாலும், கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் மீதும் பனிபடர்ந்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் பிற்பகலுக்கு பின்னரே சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments